பஞ்சகவ்யா என்பது பசு மாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து வகைப் பொருளைக் கொண்டு தயார் செய்வது ஆகும். அதாவது சாணி, கோமியம், பால், தயிர், நெய் அதனுடன் மேலும் வாழைப்பழம், கரும்புச்சாறு, இளநீர், ஈஸ்ட் சேர்த்து ஒரு மண்டலம் அதனுள் நுண்ணுயிர்களை வளர்ப்பதே பஞ்சகவ்யா ஆகும். முன்காலத்தில் வீடுகளில் நடக்கும் விசேஷத்தில் புன்யாசனம் செய்ய வரும். அந்தணர் வீட்டில் உள்ள அனைவரையும் பிரசாதம் என அருந்த செய்வார். ஏன் என்றால் ஒரு வீட்டில் விஷேசம் என்றால் பலரும் கலந்து கொள்ளும் போது நோய் தொற்று ஏற்படாமல் இறுக்கவே இந்த முறையாகும். காலப்போக்கில் இது அழிந்து விட்டது. நம் முன்னோர்கள் வழி நாம் நடந்தால் நமக்கு நன்மையே விளையும் என்பதில் சிறிதும் மாற்றம் இல்லை என்றே கூறுவேன்.
No comments:
Post a Comment