Wednesday, 31 July 2013

திறன் மிகு நுண்ணுயிரி (effective micro organisms)

வீட்டு கழிவுகளை மக்க வைக்கும் தொழில் நுட்பம் 

 திறன் மிகு நுண்ணுயிரி (effective micro organisms)  
    தயாரிக்கும் முறை 

தேவையான பொருள்

மஞ்சள் பூசணி  5 k  .g
பப்பாளி பழம்  5 k .g
வாழை பழம் 25
முட்டை 2
வெல்ல்ம் 500grm
மோர்  2lr
இளநீர் 1
அரிசி கழுவிய நீர் இப் பழங்கள் முழ்கும் வரை

தயாரிக்கும் முறை

பழங்கள்  அனைத்தையும் பெரிய துண்டுகளாக வெட்டி ஒரு பிளாஸ்டிக் டப்பில் போட்டு அதன் மேல் மோர் இளநீர் முட்டை வெல்ல்ம் ஆகியவற்றை போட்டு இக் கலவை முழ்கும் வரை அரிசி கழுவிய நீர் விட்டு மூடி  வைக்க வேண்டும் 15நாள்  கழித்து  பார்த்தால் மேல் பகுதி நீரில் வெண்மை நேரத்தில் ஆடை போல் தெரியும் அவ்வாறு இருந்தால் திறன் மிகு நுண்ணுயிரி (effective micro organisms)   தயார் என்று அர்த்தம் .

பயன் படுத்தும் முறை 

இக் கரைசலை நன்கு கலக்கி பின் அதில் உள்ள நீரை 1:10 விகிதத்தில் தண்ணீர் சேர்த்து கழிவுகள் மீது  தெளிக்க வேண்டும் இவ்வாறு 15 நாளுக்கு 1 முறை தெளித்து வர கழிவுகள் 60 நாளில் மக்கி விடும் . கழிவுகள் காயாத வாறு தினமும் நீர் தெளிப்பது அவசியம் ஆகும் .

Friday, 1 March 2013

ஜீவாமிர்தம்

                                                                  ஜீவாமிர்தம்
 வணக்கம் .
பல் வகை பயிர் தொழில் நுட்பத்திற்கு பின் நாம் செய்ய வேண்டியது ஜீவமிர்த்த கரைசல் இடுவது அவசியம் ஆகும் . இதனால் செலவும் குறைவு மண்ணும் வளமாகும் .
ஜீவாமிர்தம் என்றால் என்ன ?
மண்ணில் உயிர் சத்தை அதிகரிக்கும் கரைசல் ஜீவாமிர்தம் ஆகும் இதை இடுவதால் 15 அடி ஆழத்தில் உள்ள மண்புழுவும் எழுந்து வரும் என்பது உறுதி 
ஜீவாமிதம் தயாரிக்கும் முறை :-
சாணி 10 கிலோ 
கோமியம் 10லிட்டர் 
வெல்லம் 2 கிலோ 
கொள்ளு 1 கிலோ 
பாசிபயறு 1 கிலோ 
(தானியத்தை பவுடராக அல்லது முளை கட்டி அரைக்க  வேண்டியது முக்கியம் )
இவற்றுடன் 1கிலோ நல்ல ஜீவன் உள்ள மண் (கரம்பை )
இவை அனைத்தையும் 200லிட்டர் கொள்ளளவு கொண்ட பேரலில் போட்டு தண்ணீர் சேர்த்து நன்கு கிண்டி விடவேண்டும் ஒரு நாளைக்கு 3 முறை என்ற அளவில் இரண்டு நாள்கள் கழித்து பயன் படுத்த வேண்டும் இதுவே ஜீவாமிர்தம் ஆகும் .
பயன் படுத்தும் முறை மற்றும் அளவு :-
1 ஏக்கருக்கு 200லிட்டர் கரைசல் இதை பாசன நீருடன் கலந்து விட வேண்டும் .இதை குறுகிய கால பயிர்ருக்கு 20 நாளுக்கு 1 முறையும் நீண்ட கால பயிருக்கு மாதம் 1முறை என்ற அளவில் பயன் படுத்த வேண்டும்  

Monday, 11 February 2013

பல்வகை பயிர் தொழில் நுட்பம்

வணக்கம் அன்பர்களே ,
உங்களை சந்தித்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது . தற் சமயம் நெல் அறுவடை நடந்து கொண்டு உள்ளது . நாங்கள் செய்த பயிர்  தொழில் நுட்பத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன் . இது வரை ரசாயனம் பயன்படுத்தி வந்த வயல் என்பதால் மிகவும் உயிர் சத்து இல்லாமல் இருந்தது அதை இயற்கை விவசாயம் மாற்றி தந்து விட்டது அந்த தொழில் நுட்பம் என்ன வென்றால் நம் முன்னோர்கள் சொல்லித் தந்த பல்வகை பயிர் தொழில் நுட்பம்   ஆகும் .

பல்வகை பயிர் தொழில் நுட்பம்  என்றால் என்ன ?

பல்வகை பயிர் தொழில் நுட்பம்  என்பது 16 வகை தானியங்களை வயலில் விதைத்து அதை 45 நாட்களில் (பூக்கும்  பருவத்தில் ) மடக்கி உள  வேண்டும் அவ்வாறு செய்யும் போது தளை சத்து மண்ணில் அதி கறிக்கும் மேலும் பயறு வகை பயிர் களின் வேர் முடிச்சு களில் உள்ள ரைசோபியம் மண்ணில் உள்ள பாஸ்பரசை பயிர் களுக்கு எடுத்து கொடுக்கும் .எனவே பயிர் சிறப்பாக வளர்கிறது .

பல்வகை பயிர் தொழில் நுட்பத்திற்கு பயன்படுத்தும் தானிய வகைகள் :-

தானியப் பயிர் 4

சோளம் 1 கிலோ
கம்பு 1/2 கிலோ
தினை 1/4 கிலோ
சாமை 1/4 கிலோ

பயறு வகை பயிர் 4

உளுந்து 1 கிலோ
பாசிபயறு 1 கிலோ
தட்டைபயறு 1 கிலோ
கொண்டைக்கடலை 1 கிலோ

எண்ணை வித்துக்கள் 4

எள் 1/2 கிலோ
கடலை 2 கிலோ
சூரிய காந்தி 2 கிலோ
ஆமணக்கு 2 கிலோ

பசுந்தாள் பயிர் கள்  4

தக்கை பூண்டு 2 கிலோ
சணப்பு 2 கிலோ
நரிபயறு 1/2 கிலோ
கொள்ளு 1 கிலோ

மணப் பயிர்கள் 4

கடுகு 1/2 கிலோ
வெந்தயம் 1/4 கிலோ
சீரகம் 1/4 கிலோ
கொத்தமல்லி 1 கிலோ

இவை அனைத்தையும் விதைத்து 45 முதல் 50 நாட்களில்  மடக்கி உள வேண்டும்
மேலும் கடைசி உளவின் போது 200 கிலோ வேப்பன் கொட்டையை இடித்து வயலில் துவ வேண்டும்
இவ்வாறு செய்யும் போது வேர்புழு தாக்கம் குறையும் .

.