பஞ்சகவ்யா என்பது பசு மாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து வகைப் பொருளைக் கொண்டு தயார் செய்வது ஆகும். அதாவது சாணி, கோமியம், பால், தயிர், நெய் அதனுடன் மேலும் வாழைப்பழம், கரும்புச்சாறு, இளநீர், ஈஸ்ட் சேர்த்து ஒரு மண்டலம் அதனுள் நுண்ணுயிர்களை வளர்ப்பதே பஞ்சகவ்யா ஆகும். முன்காலத்தில் வீடுகளில் நடக்கும் விசேஷத்தில் புன்யாசனம் செய்ய வரும். அந்தணர் வீட்டில் உள்ள அனைவரையும் பிரசாதம் என அருந்த செய்வார். ஏன் என்றால் ஒரு வீட்டில் விஷேசம் என்றால் பலரும் கலந்து கொள்ளும் போது நோய் தொற்று ஏற்படாமல் இறுக்கவே இந்த முறையாகும். காலப்போக்கில் இது அழிந்து விட்டது. நம் முன்னோர்கள் வழி நாம் நடந்தால் நமக்கு நன்மையே விளையும் என்பதில் சிறிதும் மாற்றம் இல்லை என்றே கூறுவேன்.
மண்ணை வளமாக்க சுவையும் மணமும் உடைய காய்கறிகள், பழங்கள், பூக்களை பெற்றிட இயற்க்கை உரமான மண்புழு உரம் பயன் படுத்த வேண்டும்.
Friday, 23 March 2012
Friday, 16 March 2012
மண்புழு உரம் என்றால் என்ன?
மண்புழு உரம் என்பது
இந்த உலகில் 120 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்தே மண்புழுக்கள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அங்கக கழிவுகளை மட்க வைத்து உரமாக்கி மீண்டும் பயிர்கள் கிரகித்து கொள்ளும் நிலைக்கு கொண்டு செல்கின்றன. இதனால் மண்ணில் மண்புழுக்களின் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது ஆகும். மேலும் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுதுவதோடு, நோய் கிருமிகளையும் இந்த மண்புழுக்கள் அழித்து விடுகின்றன. மண்புழுக்களை சுற்றுப்புற சூழ்நிலை அமைப்பாளர்கள் எனக் கூறலாம். ஏனெனில் அவை மண்ணின் இயற்பியல் சுற்றை மாற்றி அமைக்கிறது.

நோக்கம்
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வழி முறை :-
நம் முன்னோர்கள் இயற்க்கை முறையில் விவசாயம் செய்து நோய் இல்லா வாழ்வு வாழ்ந்தார்கள். ஆனால் நாம் இன்று அவசர உலகில் இராசயனதிர்க்கு அடிமையாகி விட்டோம். அதை மாற்றி மீண்டும் இயற்கைக்கு மாற வேண்டும் என்பதே எனது நோக்கம்.
இயற்க்கை விவசாயம் செய்வதன் மூலம் சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், இயற்க்கையான உணவுப் பொருள்கள், விவசாய செலவு குறைதல், நிலம், நீர் வளம் பாதுகாக்கப் படும் என்பது உறுதி.

மண்புழு உரத்தின் பயன்கள்
* இயற்கை கழிவுகளை, மண்புழுக்களைக் கொண்டு மட்க வைப்பதன் மூலம், நல்ல கட்டமைப்புடன் கூடிய, நச்சுத்தன்மையற்ற நல்ல மதிப்பூட்டமுள்ள எரு கிடைக்கிறது.
* பயிர் வளர்ச்சிக்கு தேவையான கணிமப்பொருள்களையும், நுண்ணூட்டங்களையும் பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்து நல்ல கலப்பு உரமாக செயல்படுகிறது.
·* தொழுஉரம், மண்ணில் உள்ள நோய் பரப்பக்கூடிய நுண்ணுயிர்களை குறைத்து விடுகிறது.
* பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கும், சமுகத்தின் கீழ்தட்டில் உள்ள மக்களுக்கும், மண்புழு தயாரித்தல் ஒரு சிறந்த குடிசைத் தொழிலாக அமைந்து அவர்களின் வாழ்க்கைக்கு கூடுதல் வருமானத்தை அளிக்கிறது.
·* ஒவ்வொரு கிராமத்திலும், வேலையில்லாத இளைஞர்களையும் பெண்களையும் இணைத்து கூட்டுறவு சங்கங்கள்அமைத்து, மண்புழு உரம் தயார்செய்யலாம். மேலும் அவர்களே விலை நிர்ணயம் செய்து கிராம விவசாயிகளுக்கு விற்பனை செய்து ஒரு புதுமை படைக்கலாம். இதன் மூலம் இளைஞர்கள் நல்ல வருமானம் பெறுகின்றனர். அதோடுமட்டுமல்லாமல் நல்ல தரமான தொழுஉரத்தை அளித்து ஒரு நல்ல நீடித்த வேளாண்மை தொழில் செய்ய ஊக்குவிக்கிறது.

Monday, 12 March 2012
Subscribe to:
Posts (Atom)