தொல்லுயிர்கரைசல்
தொல்லுயிர் கரைசல் என்பது புதிய சாணம் 10 கிலோ ,கடுக்காய் தூள் 50 கிராம் ,அதிமதுர தூள்5 கிராம் , வெல்லம் 1.5 கிலோ தண்ணீர் 1 லிட்டர் இதில் முதலில் தண்ணீரை லேசாக சுடவைத்து அதில் அதிமதுர பொடியை கலக்கி வைத்துகொள்ளவும் பின் 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் கேனில் அனைத்து பொருள்களையும் சேர்த்து நன்றாக கலக்கி மூடி விடவேண்டும். இரண்டு நாள் கழித்து கேனில் உள்ள மீத்தேன் வாய்வை வெளியேற்றி பின் 20 லிட்டர் தண்ணீர் சேர்த்து வைக்க வேண்டும் .10 நாட்களில் தொல்லுயிர்கரைசல் தயார் .
தொல்லுயிர்கரைசல் பயன் படுத்தும் முறை மற்றும் அளவு :-
400 லிட்டர் தண்ணீரில் 1 கேன் தொல்லுயிர்கரைசல் கலந்து 2 ஏக்கர் நிலத்திற்கு பாய்ச்ச வேண்டும்.
10 லிட்டர் தண்ணீருடன் 1 லிட்டர் தொல்லுயிர்கரைசல் சேர்த்து இலைகளில் தெளிக்கவும் செய்யலாம்.
இது இலை தழை களை விரைவில் மக்க வைக்கும் தன்மை கொண்டது .
தொல்லுயிர்கரைசல் என்றால் என்ன
தொல்லுயிர் கரைசலில் இருக்கும் பாக்டீரியா archae bacteria ஆகும் . இது உலகின் முதல் பாக்டீரியா ஆகும் .நம் வயல்களில் தற்போது பாக்டீரியா குறைந்த அளவே உள்ளது எனவே நாம் பல்வகை பயிர் தொழில் நுட்பம் பயன் படுத்தி செடிகளை விரைவில் மக்க வைக்க இக்கரைசல் நன்கு உதவும் .
மிக்க நன்றி... நண்பர்களிடம் பகிர்கிறேன்...
ReplyDelete